Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உலகப் பூப்பந்து போட்டி: அரையிறுதியில்  பெர்லி - தீனா

30/08/2025 05:46 PM

பாரிஸ், 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2025 உலக பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் முண்ணனி மகளிர் இரட்டையர் பெர்லி டான் - எம். தீனா முன்னேறியுள்ளனர். 

நேற்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் அவர்கள் பல்கேரியாவின் ஆட்டக்காரர்களைத் தோற்கடித்தனர்.

பிரான்ஸ் பாரிசில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பெர்லி டான் - எம். தீனா ஜோடி பல்கேரியாவின் சகோதர ஆட்டக்காரர்களான கெப்ரியலா ஸ்டொவா - ஸ்டெஃபனி ஸ்டொவா இணையை எதிர்கொண்டது.  

அதில், அவர்களுக்கு எதிரான சவால்களை எளிதாக பின்னுக்குத் தள்ளி  21-15, 21-10 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்றனர். 

இதன்வழி, குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கம் மலேசியாவின் கைகளில் இருப்பதையும் பெர்லி - தீனா ஜோடி உறுதிசெய்துள்ளது. 

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா ஜப்பானுடன் மோதுகின்றது. 

மதிப்புமிக்க இப்போட்டியில், முதல் மகளிர் இரட்டையர் பதக்கத்தை வென்று புதிய வரலாற்றை உருவாக்கும் இலக்கை அவர்கள் நெருங்கியுள்ளனர்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]