ஜகார்த்தா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் இதுவரை அறுவர் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து, ஜகார்த்தா மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டங்களால் சேதமடைந்த அனைத்து இடங்களிலும் துப்புறவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜகார்த்தா முழுவதும் இன்று சாலைத் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் நிதியமைச்சரின் வீடு சேதமடைந்துள்ளதாக போலீஸ் கூறியது.
இந்நிலையில், பொது உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் மீது இராணுவமும் போலீசும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதற்கும், போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து, இந்தோனேசியாவில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)