கோலா லங்காட், 01 செப்டம்பர் (பெர்னாமா) - இன்று அதிகாலை, தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை, SKVE-இல் தெலுக் பங்ளிமா காராங் நோக்கி செல்லும் வழியில் நான்கு சக்கர வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த நான்கு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
அச்சம்பவத்தில், மூவர் வாகனத்தினுள் சிக்கிக் கொண்டதோடு ஒருவர் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தொலைபேசி அழைப்பு கிடைத்ததும் தெலுக் பங்ளிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளும் உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதை அவர்கள் கண்டறிந்தனர்.
காரினுள் சிக்கிக் கொண்ட 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் உயிரிழந்ததை பாதுகாப்புப் பணியாளர்கள் உறுதிபடுத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)