தியான்ஜின், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- சீனாவிற்கான தமது அலுவல் பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியாவின் அரச தந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவிருப்பதோடு பன்முகத்தன்மைக்கான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவிருக்கிறார்.
சீனாவின் பழமையான நவீன பல்கலைக்கழகமான தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் "Sovereign Interdependence: Building a Shared Future in Asia" என்ற தலைப்பில் ஒரு பொது சொற்பொழிவை நிகழ்த்தினார்.
கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர் உட்பட 500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
1895 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தியான்ஜின் பல்கலைக்கழகம் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் புகழ்பெற்றது.
பொது சொற்பொழிவுக்குப் பிறகு, நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார், சீனாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களான 'Rianlon Corporation' மற்றும் சீன தொடர்பு கட்டுமான நிறுவனம், சிசிசிசி உடன் நேருக்கு நேர் வணிகம் குறித்தச் சந்திப்பை நடத்தினார்.
தியான்ஜினில் தலைமையகத்தைக் கொண்ட 'Rianlon Corporation', பொலிமர் சேர்க்கைகளில் உலகளவில் முன்னோடியாக இருப்பதோடு, வாகனம் மற்றும் மின்னியல் உட்பட பல்வேறு தொழில்களை ஆதரிக்கும் மேம்பட்ட பொருட்களை வழங்குகிறது.
அதேவேளையில், சிசிசிசி பெரிய அளவிலான உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் உலகளவில் முன்னணி நிறுவனமாகும்.
அவ்விரு நிறுவனங்களும், மலேசியாவின் கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், இ.சி.ஆர்.எல்-கான முதன்மை குத்தகையாளர்களாகும்.
2025ஆம் ஆண்டு ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு,எஸ்.சி.ஓ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றது, பிரதமரின் தியான்ஜின் பயணத்தின் சிறப்பம்சமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)