Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறைக்கான புதிய சந்தையை மலேசியா ஆராய்ந்து வருகிறது

01/09/2025 05:27 PM

தியான்ஜின், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- புதிய மற்றும் பாரம்பரியமற்றச் சந்தைகளில் ஊடுருவுவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக, மலேசியா 'Semiconductor' எனப்படும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறைக்கான புதிய சந்தையை ஆராய்ந்து வருகிறது.

சீனா இத்துறையில் அசாதாரண முன்னேற்றத்தைக் கண்டுள்ளதோடு, மலேசியா அந்நாட்டில் அத்தொழில்துறையைக் கற்கவும், தனது சக பங்காளிகளுடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்பை ஆராயவும் விரும்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மின்சார மற்றும் மின்னியல் பொருள்களுடன் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு 'Semiconductor' மையமாக மலேசியா விளங்குவதோடு, நாட்டின் அப்பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

எனினும், மலேசியா புதிய சந்தைகளைத் தேடி வரும் அதே வேளையில், சீனா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக அன்வார் கூறினார்.

இத்துறையில் புதிய திறமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-ஐ பயன்படுத்தும் அண்மைய தொழில்நுட்பங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சீனா அதற்கான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ள வேளையில், நாளை அந்நாட்டைத் தளமாகக் கொண்டுள்ள 'Semiconductor' துறை பங்கேற்பாளர்கள் அனைவரையும் தாம் சந்திக்கவிருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)