நியூ யார்க், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபலென்கா தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளரான அவர் உபசரணை நாட்டின் ஜெசிக்கா பெகுலாவுடன் விளையாடினார்.
இவ்வாண்டும் அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை வெல்லும் இலக்கில் களமிறங்கிய Sabalenka, முதல் செட்டில் 4-6 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
முதல் செட் தமக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், அடுத்த இரண்டு செட்களிலும் அபார ஆட்டத்திறனை வெளிபடுத்தி 6-3, 6-4 என்ற புள்ளிகளில் சபலென்கா வெற்றி பெற்றார்.
தோல்வி கண்டாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பெகுலாவை அவர் பாராட்டினார்.
இறுதி ஆட்டத்தில் சபலென்கா அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா-வுடன் களமிறங்கவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)