Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

முன்னணி சீனத் தொழில்துறை தலைவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிரதமர் தலைமையேற்றார்

02/09/2025 04:21 PM

பெய்ஜிங், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- முதலீட்டை அதிகரிப்பதற்கும், புதிய வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கும், முன்னணி சீனத் தொழில்துறை தலைவர்களுடனான தொடர் வியூக கலந்துரையாடலுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை தலைமையேற்றார்.

சீனாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் தற்போது அந்நாட்டின் தலைநகரில் இருக்கின்றார்.

இன்று காலை, டத்தோ ஸ்ரீ அன்வார், JD லொஜிஸ்டிக்கின் தலைமை செயல்முறை அதிகாரியும் வியூக நிர்வாக தலைமை அதிகாரியுமான ஹு வேய் தலைமையில், JD.com இன் உயர் நிர்வாகத் தரப்புடன் சந்திப்பு நடத்தினார்.

NASDAQ 100-இல் பட்டியலிடப்பட்ட மற்றும் 'Fortune Global 500' நிறுவனமான, JD.com, சீனாவின் மிகப்பெரிய மின்வணிக சில்லறை விற்பனையாளராக உள்ளது.

'Yangtze Memory Technologies' தலைவரான சென் நான்சியாங் தலைமையில், சீன மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை சங்கம், சி.எஸ்.ஐ.ஏ-இன் தலைவர்களுடனும் பிரதமர் சந்திப்பு நடத்தினார்.

இக்கூட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)