நியூ யார்க், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவுக்கான வெற்றியாளர் பட்டத்தை ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கராஸ் வென்றிருக்கின்றார்.
விறுவிறுப்பான இறுதி சுற்றில், இத்தாலியின் யான்னிக் சின்னரை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் உலகின் முதலிடத்தையும் அல்கராஸ் கைப்பற்றினார்.
இவ்வாண்டில், மூன்றாம் முறையாக இரு வீர்ர்களும் சந்தித்துகொண்ட இந்த இறுதி ஆட்டத்தைக் காண அமெரிக்க அதிபர் டோனல்ட் டிராம்பும், ரசிகர்களுடன் கலந்து கொண்டார்.
உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த 22 வயது கார்லோஸ் அல்கராஸ், உலகின் முதன் நிலை வீரர் யான்னிக் சின்னருடன் கடும் போட்டியை எதிர்கொண்டார்.
6-2 என்று என்று முதல் செட்டை வென்ற அல்கராஸ், பின்னர் 6-3 எனும் நிலையில் இரண்டாம் செட்டில் சின்னரிடம் தோல்வி கண்டார்.
விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து போராடிய அல்கராஸ் இறுதியில் 6-1, 6-4, எனும் புள்ளிகளில் வெற்றி பெற்று அமெரிக்க மண்ணில் ஸ்பெயின் கொடியை உயரச் செய்தார்.
இந்த வெற்றியின் வழி, ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அல்கராஸ் மீண்டும் உலகின் முதன் நிலை வீராகவும் மகுடம் சூடிக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)