காத்மாண்டு, 08 செப்டம்பர் (பெர்னாமா) -- நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, இன்று அந்நாட்டின் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் மாண்டதாக போலீஸ் தெரிவித்தது.
நாடாளுமன்ற கட்டித்திற்குள் செல்ல, ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்ததாக போலீஸ் கூறியது.
அதனை தடுக்கும் பொருட்டு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தவறான பயன்பாட்டைத் தடுக்கும் பொருட்டு, சமூக வலைதளங்கள் பதிவு செய்ய வேண்டும் அந்நாட்டின் அரசாங்கள் கட்டளையிட்டிருந்தது.
அவ்வாறு செய்யத் தவறியதால், கடந்த வாரம் முகநூல் உட்பட பல சமூக ஊடக தளங்களின் பயன்பாட்டை நேப்பாளம் தடை செய்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)