Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சம்பவத்தன்று சாராவை எழுப்ப முயற்சித்தபோது அவரிடமிருந்து பதில் இல்லை - பாதுகாவலர் சாட்சியம்

12/09/2025 06:55 PM

கோத்தா கினபாலு, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- சாரா கைரினா மகாதீரை உட்படுத்திய சம்பவ இரவன்று, பணியில் இருந்த பாதுகாவலர், அப்பெண்ணின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அவரின் பெயரைச் சொல்லி எழுப்ப முயன்றதாக, வெள்ளிக்கிழமை, மரண விசாரணை நீதிமன்றத்தில் கூறினார்.

எனினும், அம்மாணவியிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை என்று 65 வயதான லினா மன்சோடிங் சலிஹா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அம்மாணவி 'குறட்டை விடுவது' போல வேகமாக மூச்சு விட்டதாக, மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹசான் முன்னிலையில் லினா வருத்தத்துடன் தெரிவித்தார்.

சாரா மரணம் தொடர்பான விசாரணையின் ஏழாவது நாளில், அம்மாணவியின் குடும்ப வழக்கறிஞர் ஷஹ்லான் ஜுஃப்ரியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நான்கு குழந்தைகளின் தாயான லினா அவ்வாறு கூறினார்.

மேலும், கால்வாயில் கிடக்கக் காணப்பட்ட சாரா, காலணிகளையோ அல்லது தலையில் ஹிஜாப்போ அணியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், ஆம்புலன்சின் வருகைக்காகக் காத்திருக்கும் வரையில், அம்மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தங்கும் விடுதியின் முன்புறத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)