Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கம்போங் சுங்கை பாருவில் அமளி; அமைதி காக்க வேண்டும்

11/09/2025 05:35 PM

கோலாலம்பூர், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் இன்று நிகழ்ந்த குழப்பமான சம்பவத்தைத் தொடர்ந்து, அமைதியாக இருக்கவும், அவசரப்பட்டுச் செயல்பட வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு அல்லது உண்மை உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு, பொதுமக்கள் அதிகாரப்பூர்வத் தரப்புகளிடமிருந்து உண்மையான தகவல்களைப் பெற வேண்டும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

''நாம் நல்லிணக்கம் நிறைந்த ஒரு நாட்டில் வாழ்கிறோம். எனவே, அனைத்து தரப்பினரின் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதே மிக முக்கியமான விஷயம். எனவே, குருட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறுவார்கள். எனவே, நீங்கள் பெறும் தகவல்கள் உண்மையான தரப்புகளிடமிருந்து பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

இன்று, சட்ட அமலாக்கத்திற்கான 6வது தேசிய தடயவியல் அறிவியல் கருத்தரங்கின் நிறைவு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இவ்வாறு கூறினார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)