Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஹாங் காங் பூப்பந்து போட்டி; காலிறுதிக்குத் தேர்வாகிய பெர்லி - தினா

11/09/2025 05:21 PM

ஹாங் காங், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- ஹாங் காங் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் தேசிய மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தினா ஜோடி தேர்வாகியது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர்கள், இந்தோனேசிய விளையாட்டாளர்களுடன் மோதினர்.

நடப்பு வெற்றியாளர்களான அவர்கள், இந்தோனேசியாவின் ஃபெப்ரியான டிவிபுஜி குசுமா - மெய்லி ட்ரியாஸ் புஸ்பிதாசாரிவுடன்  (Febriana Dwipuji Kusuma-Meilysa Trias Puspitasari) விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் 21-18, 21-17 என்ற புள்ளிகளில் பெர்லி - தினா  வெற்றி பெற்றனர்.

இந்த ஆட்டம் 37 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், பெர்லி - தினா தங்களின் சகாக்களான கோ பெய் கீ - தியோ மெய் சிங் (Go Pei Kee-Teoh Mei Xing) ஜோடியுடன் களம் காணவுள்ளனர்.

தைவானின் சு யா சிங் - சங் யூ-சுவான்-உடன் (Hsu Ya Ching-Sung Yu-Hsuan) விளையாடிய நாட்டின் கோ பெய் கீ - தியோ மெய் சிங் ஜோடி, 21-19, 21-18 என்று வெற்றி பெற்றனர்.

இந்த ஆட்டம் 41 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் நாட்டின் வான் ஆரிஃப் வான் ஜுனாய்டி - யாப் ராய் கிங் (Wan Arif Wan Junaidi-Yap Roy King) ஜோடியும் காலிறுதிக்குத் தேர்வாகியது.

தங்களின் சகாக்களுடன் விளையாடிய வான் ஜுனாய்டி - யாப் ராய் 21-17, 21-19 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)