பிரேசிலியா, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜயிர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு இத்தீர்ப்பை வழங்கியது.
தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 70 வயதான போல்சனாரோ, ஜனநாயகத்தை சீரழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியது.
இதன் வழி, அந்நாட்டின் வரலாற்றில் ஜனநாயகத்தை சீர்குழைத்ததற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபாராக போல்சனாரோ விமர்சிக்கப்பட்டுள்ளார்.
போல்சனாரோவிற்கான தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், அமெரிக்கா உட்பட வெளிப்புற அழுத்தங்களுக்கு பிரேசிலிய ஜனநாயகம் அடிபணியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]