காத்மாண்டு, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அந்நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சுஷிலா கார்கியை இடைக்கால பிரதமராக நியமிக்க அதிபர் ராமச்சந்திரா பௌவ்டல் மற்றும் இராணுவத் தலைவர் அஷோக் ராஜ் சிடெல் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அச்சந்திப்பின் முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆர்பாட்டங்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சமூக ஊடக தளங்களின் பயன்பாட்டை நேபாளம் தடை செய்ததால் அந்நாட்டின் இளைஞர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டங்களில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 1,300 பேர் காயமடைந்தனர்.
-பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]