கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- தேசத்துரோகக் கூறுகளைக் கொண்ட மற்றும் மாட்சிமைத் தங்கிய மாமான்னரை அவமதிக்கும் வகையிலான, டிக்டோக் சமூக வலைத்தளத்தில் பரவிய காணொளி தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று, @muhammad.bin.abdu969 எனும் கணக்கிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த காணொளி தொடர்பில், அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, JSJ இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த 41 வயதுடைய நபருக்கு வன்முறை தொடர்பிலான மூன்று குற்றப்பதிவுகளும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட ஒரு குற்றப்பதிவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டம் செக்ஷன் 504 உட்பட 1998-ஆம் ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)