Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான தகுதியைப் பூர்த்தி செய்யும் மெட்ரிக்ஸ் & எஸ்.டி.பி.எம்-ஐ அகற்ற வேண்டியதில்லை

14/09/2025 06:18 PM

நிபோங் திபால், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- பொதுப் பல்கலைக்கழங்களில் பயில்வதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதால் மெட்ரிகுலேஷன் மற்றும் எஸ்.டி.பி.எம் கல்வி முறையை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியது. 

இவ்விரண்டும் நீண்ட காலமாகவே மலேசிய கல்வி முறையின் ஒரு பகுதியாக உள்ளதால் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான அணுகுமுறையை அளிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கல்வி அமைச்சர் ஃபஹ்லினா சிடேக் தெரிவித்தார். 

''விவாதத்தையும் கலந்துரையாடலையும் நான் தொடர்கிறேன். இந்த விவாதம் மிகையாக இருக்கக்கூடாது என்பதை மட்டுமே நான் அறிவுறுத்த விரும்புகிறேன். மேலும், எஸ்.டி.பி.எம் மற்றும் மெட்ரிகுலேஷன் ஆகியவை நமது கல்வி முறையில் நீண்ட காலமாக உள்ளன என்பதை நான் முன்னர் குறிப்பிட்டுள்ளேன். அதன் அர்த்தமும் இதுதான். இரண்டுமே அவற்றின் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இரண்டும் பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான தகுதியைப் பூர்த்தி செய்கின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது எங்களுக்குக் கிடைக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதனால்தான் மலேசிய கல்வி அமைச்சின் அடிப்படையில், இந்த இரு திட்டங்களுக்கும் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம் என்று நான் முன்னர் குறிப்பிட்டேன். அவர்களின் கல்வி மற்றும் நலனில் கவனம் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய குறிப்பிட தேவையில்லை,'' என்றார் அவர். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை