முனிக், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், ஹாம்பர்கர் எஸ்.வி-உடன் மோதிய பாயர்ன் முனிக் 5-0 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.
இப்பருவத்தின் மூன்றாம் ஆட்டத்தில் களமிறங்கிய பாயர்ன் முனிக், சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
சொந்த அரங்கில் கூடுதல் பலத்துடன் விளையாடிய பாயர்ன் முனிக் ஆட்டடத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னணி வகித்தது.
ஆறு நிமிடங்கள் கழித்து, இரண்டாவது கோலை அடித்த வேளையில் ஹெரி கேன் மூலம் முனிக் 26 நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து முனிக், ஹாம்பர்கர் அணியை பின்னுக்குத் தள்ளியது.
29 நிமிடத்தில் நான்காவது கோலை அடித்து, லுயிஸ் டியாஸ் முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 62 நிமிடத்தில் ஹெரி கேன் மேலும் ஒரு கோலை அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் வழி, 9 புள்ளிகளுடன் பாயர்ன் முனிக் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில், பொருசியா டார்ட்மண்ட்டும் ஹைடன்ஹெய்மும் விளையாடின.
இவ்வாட்டத்தின் 21-வது நிமிடத்தில், புடு சிவ்ஸிவாட்ஸே சிவப்பு அட்டை வழங்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் ஹைடன்ஹெய்ம் அணி 10 ஆட்டக்காரர்களுடன் விளையாட நேர்ந்தது.
இதனை சாகதமாக பயன்படுத்திக் கொண்ட, பொருசியா டார்ட்மண்ட் 33-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னணி வகித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் தனது வெற்றி கோலை அடித்து பொருசியா டார்ட்மண்ட் தனது வெற்றியை உறுதி செய்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]