Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஹாங்காங் பொது பூப்பந்து: பெர்லி - தினா தோல்வி

13/09/2025 06:30 PM

ஹாங் காங், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஹாங் காங் பொது பூப்பந்து போட்டி...

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையரான பெர்லி தான் - எம். தினா இணை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் கனவு ஈடேறாமல் போனது.

உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளர்களான பெர்லி தான் - எம். தினா, உலகின் நான்காம் நிலை விளையாட்டாளர்களான சீனாவின் ஜியா ஈ ஃபான் - சாங் ஷு ஸியான் ஜோடியிடம் 14-21, 11-21 என்று நேரடி செட்டில் தோல்வியைத் தழுவினர்.

ஹாங்காங், கொலிசியமில் நடைபெற்ற ஆட்டத்தில் பெர்லி தான் - எம். தினா அணி 35 நிமிடங்களிலேயே எளிதில் தோல்வி கண்டனர்.

அந்த ஜோடி, இரட்டையர் பிரிவில் ஈ ஃபான் - ஷு ஸியான்-இடம் தொடர்ச்சியாக சந்திக்கும் ஐந்தாவது தோல்வி இதுவாகும்.

அதோடு, மலேசியா மாஸ்டர்ஸ் மற்றும் சீனா பொது பூப்பந்து போட்டிக்குப் பிறகு, அரையிறுதியில் அவர்கள் மூன்றாவது முறையாக ஈ ஃபான் - ஷு ஸியான் இணையிடம் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஹாங் காங் பொது பூப்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் சீனாவின் லியூ ஷெங் ஷு-தான் நிங் ஜோடியை தோற்கடித்து, பெர்லி-தினா ஜோடி வெற்றியாளர் கிண்ணத்தை தட்டிச் சென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)