தொண்டோ, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- மணிலா தொண்டோவில் உள்ள ஒரு குடிசை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு மணி 8 அளவில் இச்சம்பவம் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
பின்னரவு மணி 2.46 அளவில், தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இப்பெரிய தீச்சம்பவத்தில் 1,100 குடும்பங்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிகள் மற்றும் அரசாங்க அலுவலங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிர் சேதம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)