கூச்சிங், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025/ 2026-ஆம் ஆண்டுக்கான FA கிண்ண காற்பந்து போட்டி.
நேற்றிரவு சரவாக், கூச்சிங் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டி.பி.எம்.எம் எப்ஃசி-ஐ 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கூச்சிங் சிட்டி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.
9-4 என்ற மொத்த புள்ளிகளுடன் அவ்வணி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் உபசரணை அணியின் இறக்குமதி ஆட்டக்காரரான Wanja Ronald Ngah அவ்வணிக்கான முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ரமாடான் சைஃபுல்லா தட்டிக் கொடுத்த பந்தை, Danial Asri லாவகமாக கோலாக்கினார்.
இந்நிலையில், ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரரான ஜோர்டான் ரோட்ரிகூஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் அழுத்தத்தை எதிர்நோக்கிய டி.பி.எம்.எம் எப்ஃசி பெரும் சவாலை எதிர்கொண்டது.
அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கூச்சிங் சிட்டி, ஐடில் ஷரின் ஷஹாக் மூலம் பெற்ற மூன்றாவது கோலுடன் முதல் பாதியை நிறைவுச் செய்தது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 53, 58, 60 மற்றும் 77-வது நிமிடங்களில் அடிக்கப்பட்ட தொடர் கோல்களின் மூலம் கூச்சிங் சிட்டி அதன் வெற்றியை உறுதி செய்தது.
காலிறுதியில் கூச்சிங் எப்ஃசி, திரெங்கானு எப்ஃசி உடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)