Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்களுக்கு செப்டம்பர் 30 முதல் ரோன் 95 பெட்ரோல் ரி.ம.1.99 சென் விலையில் விற்கப்படும்

22/09/2025 12:38 PM

புத்ராஜெயா, 22 செப்டம்பர் (பெர்னாமா) - வரும் செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு உதவித் தொகை கொண்ட ரோன் 95 பெட்ரோலை பயன்படுத்த ஓட்டுநர் உரிமம் கொண்ட அனைத்து மலேசியர்களும் தகுதி பெறுகின்றனர். 

BUDI95 எனப்படும் BUDI MADANI RON95 திட்டத்தின் கீழ் இது அமலுக்கு வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.  

ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிலிருந்து ஒரு ரிங்கிட் 99 சென்னுக்குக் குறைப்பதன் வழி அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக பிரதமர் கூறினார். 

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பின் போது பிரதமர் இந்த அறிவிப்பைச் செய்தார். 

சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே மற்றும் தேசிய பதிவுத் துறை, ஜேபிஎன்-இன் தரவுகள் அடிப்படையில் ஒரு கோடியே 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கி வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)