| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
இந்தியா, 09 ஜனவரி (பெர்னாமா) -- நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தணிக்கை குழுவில் உள்ள ஒருவரின் ஆட்சேபனை காரணத்தினால் அத்திரைப்படம் வெளியீடு காணவில்லை.
அதனைத் தொடர்ந்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
படத்திற்கு UA தணிக்கைச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று நீதிபதி பி.டி. ஆஷா, இன்று காலை உத்தரவிட்டுள்ளார்.
ஒரு உறுப்பினரின் புகாரின் அடிப்படையில் படத்தை மீண்டும் ஆய்வுக்கு அனுப்ப முடியாது என்றும், UA சான்றிதழ் வழங்கிய பின் தலைவருக்கு அதனை மாற்ற அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)