கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பிலான எந்தவொரு கடித்தத்தையும், Larut நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Hamzah Zainudin-இடம் இருந்து மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இதுவரை பெறவில்லை.
இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது டான் ஶ்ரீ ஜொஹாரி அத்தகவலை உறுதிபடுத்தினார்.
ஹம்சா தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாகர் அஹ்மாட் சம்சுரி மொக்தார் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அப்பதவி காலியாகியிருப்பது குறித்து மக்களவைத் தலைவருக்குத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்புமாறு பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசானுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]