தென்னாப்பிரிக்கா, ஜனவரி 19 (பெர்னாமா) -- தென்னாப்பிரிக்காவின் வடக்குப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வாக மையம் ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய பேரிடர் நிலையை அறிவித்தது வெளியிட்டது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் லிம்போபோ மாகாணத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதில் குறைந்தது 17 பேர் மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
லிம்போபோ மாகாணத்தில் 1,600-க்கும் மேற்பட்ட வீடுகளும் 31 பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் புமலங்கா-வில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமைடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களை இடமாற்றம்வும் தென் ஆப்ரிக்காவின் தேசிய பாதுகாப்புப் படை போராடி வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)