கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், கோலாலம்பூரில் 30 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பெரிய அளவிலான முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரில் டான் ஸ்ரீ என்ற அந்தஸ்து கொண்ட ஒருவரும் அடங்குவார்.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர், பெரிய அளவிலான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுவதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
இந்த மோசடித் திட்டத்தில் முதலீடு செய்த பலர் லட்சக் கணக்கில் பண இழப்பை எதிர்நோக்கியிருப்பது, மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக டான் ஶ்ரீ அசாம் பாக்கி சுட்டிக்காட்டினார்.
'' இந்த வழக்கில் தொடர்புடையவர்களை நாங்கள் அணுகியுள்ளோம். இது எங்கள் பொறுப்பு மற்றும் வேலை. எந்த அதிகாரப்பூர்வ தரப்புகள் ஒத்துழைப்பு வழங்கிறதோ, அவற்றையும் கவனித்துக் பார்ப்போம். ஆனால், இதுவரை அது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.'' என்றார் டான் ஸ்ரீ அசாம் பாக்கி
இன்று, கிளந்தான் கோத்தா பாருவில், கிழக்கு மண்டல ஊடகங்களுடன் எஸ்.பி.ஆர்.எம் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)