Ad Banner
 பொது

சீன புத்தாண்டு விடுமுறை; போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது

02/02/2026 06:07 PM

குவா மூசாங், பிப்ரவரி 2 (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக, கிளந்தான், குவா மூசாங்இல் உள்ள லிங்கிரான் தெங்கா உதாமா, எல்.தி.யு திட்டத்தில், புல் வெட்டுதல் மற்றும் குழிகளை மூடுதல் உள்ளிட்ட வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச்சாலையைப் பயன்படுத்தும் மக்களின் பயணம் சுமூகமாக அமைவதை உறுதி செய்யும் வகையில், Taman Wangi அருகே உள்ள ஜாலான் பெர்சியாரான் ராயா-வில், மலேசிய Roadcare நிறுவனம் அந்தப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

''சீனப் புத்தாண்டு விடுமுறை நாட்கள், பின்னர் ரமலான் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகியவற்றின் போது ஏற்படும் நெரிசலை நாங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கையாள உதவுகிறோம். அது இன்னும் நிரந்தரமான மற்றும் நீண்ட கால வழி. ஆனால் அது பின்னர். இந்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமானது என்னவென்றால், நாம் என்ன செய்ய முடியும் என்பதுதான்,'' என டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி கூறினார்.

இன்று, எல்.தி.யு திட்ட தளத்தைப் பார்வையிட்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி செய்தியாளர்களிடம் பேசினார்.

பண்டிகை காலம் மற்றும் பள்ளி விடுமுறையின் போது இப்பாதையில் அடிக்கடி ஏற்படும் சுமார் இரண்டு கிலோமீட்டர் நெரிசலுக்கான நீண்டகால தீர்வை அரசாங்கம் செயல்படுத்தி வரும் நிலையில், இது ஒரு ​​குறுகிய கால நடவடிக்கை என்று அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)