ஜோகூர் பாரு, பிப்ரவரி 2 (பெர்னாமா) -- ஜோகூருக்கு வருகைப் புரியும் ஆண்டை முன்னிட்டு, பாரம்பரிய சொத்துகளை மேம்படுத்தவும், அதன் சுற்றுலாத் தளங்களை வலுப்படுத்தவும் அம்மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாகப் பாராட்டினார்.
இன்று, ஜோகூர், ஜோகூர் பாருவில் உள்ள அபு பாக்கார் அரச அருங்காட்சியகத்திற்கு வருகைப் புரிந்த பின்னர், தமது முகநூல் பதிவில் பிரதமர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பாதுகாக்கப்பட்ட மற்றும் கவனத்தை ஈர்கக்கூடிய நிலப்பரப்பு சூழலுடன், ஜோகூர் அரச பொக்கிஷங்களையும் மதிப்புமிக்க வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கும் ஓர் அருங்காட்சியகமாக அது விளங்குவதாக பிரதமர் விவரித்தார்.
அதே வேளையில், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், நாட்டின் அடையாளம் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டுடன் இணைந்து தேசிய திட்டங்களை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளை இது ஆதரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)