பண்டார் தாசெக் செலாதான், பிப்ரவரி 03 (பெர்னாமா) -- டி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இணையம் வழியான டிக்கட் அமைப்பு OTA வழங்குநர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி தொடங்கி விரைவு பேருந்து டிக்கெட் விற்பனைக்கான QR குறியீட்டை ஒருங்கிணைப்பதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம் APAD மூலம் போக்குவரத்து அமைச்சு கட்டாயமாக்கவுள்ளது.
பயணிகளின் நடமாட்டத்தைச் சீராக்குவதையும் குறிப்பாகப் பெருநாள் காலத்தை முன்னிட்டு டி.பி.எஸ்ஸில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''எனவே, அவர்கள் இப்போது டிக்கெட்டுகளை வாங்கி QR குறியீட்டை வைத்திருந்தால் அவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. டி.பி.எஸ்ஸூக்கு வந்து நேராகப் புறப்படும் வாயிலுக்குச் செல்லலாம். எனவே, இதுதான் நாங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம். இந்த முன்னேற்றம் டி.பி.எஸ்ஸைப் பயணிகளுக்கு மிகவும் ஏற்றதாக மாற்றும் என்று நான் நம்புகிறேன்'', என்றார் அந்தோணி லோக்.
இன்று கோலாலம்பூர் டி.பி.எஸ்ஸிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது அந்தோணி லோக் தெரிவித்தார்.
QR குறியீடு இல்லாமல் முன்கூட்டியே டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கு, ஒரு ரிங்கிட் கட்டணத்தில் டி.பி.எஸ் வலைத்தள மூலம் இணையக் குறியீட்டை உருவாக்கலாம் என்று லோக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)