தெஹ்ரான், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- அணு ஆயுத பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவுடனான கலந்துரையாடல்களில் ஈரான் ஒருபோதும் அரச தந்திரத்தை நிராகரிக்கவில்லை.
இருப்பினும், தன் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், "பேரழிவு தரும்" பதிலடியை ஈரான் வழங்கும் அதன் வெளியுறவு அமைச்சு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை வேண்டுமென்றே அணுசக்தி நெருக்கடி என்று இஸ்ரேல் சித்தரித்து வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தலையிட்டு வருவதாக அந்த அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
தனது வெளியுறவுக் கொள்கையை இஸ்ரேல் பாதிக்காமல் அமெரிக்கா தற்காக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது.
பொருளாதார வழிகளைப் பயன்படுத்தி அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதினால், எவ்வித பயனும் ஏற்படாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)