Ad Banner
 உலகம்

கனடாவில் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் பலி

11/02/2026 06:42 PM

டம்ளர் ரிட்ஜ், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- செவ்வாய்க்கிழமை மேற்கு கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களில் அப்பள்ளியில் பயின்ற ஏழு மாணவர்களும் அடங்குவர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், சந்தேக நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜ் எனும் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 27 பேர் காயமுற்றனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாக்குதலுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)