Ad Banner
Ad Banner
 பொது

குதிரை ஆண்டில் மலேசியர்களின் பொருளாதாரம் மேம்படும்; பிரதமர் நம்பிக்கை

17/02/2026 07:23 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 17 (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதார செயல்திறனும் மக்களின் செழிப்பும் இவ்வாண்டில் மேலும் சிறப்பாக இருக்கும் என்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார்.

குதிரை ஆண்டு, வலிமை மற்றும் ஆற்றலின் அடையாளமாக இருப்பதாகவும், அது நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று, மலேசிய சீனர் சங்கம், ம.சீ.ச-வின் 2026 சீனப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அன்வார் தெரிவித்தார்.

''இந்தக் குதிரை ஆண்டு, அதிக புத்துணர்ச்சியூட்டும் வளர்ச்சியைத் தூண்டும் நெருப்பு குதிரை ஆண்டு என்று நான் சொல்வேன். இந்தக் குதிரை வலிமை மற்றும் சிறந்த ஆற்றலைக் குறிக்கிறது. அதோடு, மலேசியர்களின் பொருளாதார செயல்திறனும் வளர்ச்சியும் இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது,'' என்றார் அவர்.

இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களையும் உட்படுத்திய இந்த பொது உபசரிப்பு, நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்

காலை மணி 9.28 அளவில் விஸ்மா எ.சி.ஏ-க்கு வருகைப் புரிந்த அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி ஆகியோரை ம.சீ.ச தலைவர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் வரவேற்றார்.

மேலும், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னாள் ம.சீ.ச டான் ஶ்ரீ டான் கூன் ஸ்வான் மற்றும் மலேசியாவிற்கான சீன தூதர் ஓயாங் யுஜிங் ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)