புதுடெல்லி, பிப்ரவரி 19 (பெர்னாமா) -- இந்தியாவில் 1,500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீட்டின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் முழுமையான செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவும் திட்டத்தை கூகள் நிறுவனம் கொண்டுள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
''நேற்று அறிவிக்கப்பட்ட எங்கள் அமெரிக்கா-இந்தியா இணைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நான்கு புதிய அமைப்புகள் உட்பட, கடலுக்கு அடியில் உள்ள இழை ஒளியியல் கேபிள்களின் பரந்த வலையமைப்பையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்,'' என்றார் அவர்.
இன்று, புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா AI தாக்க உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் சுந்தர் அத்தகவல்களைக் கூறினார்.
தமது இளமைக் காலத்தில் அந்த கடலோர நகரமான விசாகப்பட்டினம் வழியாகச் சென்றபோது, அது மிகுந்த திறன் வாய்ப்புகளால் நிரம்பிய நகரமாக தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)