Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கட்டார் பொது டென்னிஸ் போட்டி; காலிறுதியில் முன்னணி ஆட்டக்காரர்கள்

19/02/2026 07:48 PM

டோஹா, பிப்ரவரி 19 (பெர்னாமா) -- கட்டார் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தேர்வாகியுள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் அவர் நேரடி செட்களின் வழி பிரான்சின் வாலண்டைன் ராயரை வீழ்த்தினார்.

1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அல்கராஸ் 6-2, எளிதாகக் கைப்பற்றி, இரண்டாவது செட்டில் 7-5 என மிகவும் தீவிரமாக போட்டியிட்டார்.

இருப்பினும், 22 வயதான அவர் தனது சிறந்த உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு காலிறுதியில் ரஷ்யாவின் ஏழாம் நிலை வீரரான கரேன் கச்சனோவ் எதிர்கொள்வார்.

முன்னதாக, ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸ் உடன் மோதிய கரேன் கச்சனோவ்
6-2, 4-6, 6-4 என்ற நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதனிடையே, இத்தாலியின் யானிக் சின்னர் 6-3, 7-5 என்ற நேரடு செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

அதேபோல, கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-4. என்ற நேரடி செட்களில் டேனியல் மெட்வெடேவைத் தோற்கடித்து காலிறுதி சுற்றில் கால் வைத்துள்ளார்.

அடுத்த ஆட்டத்தில் அவர் ஆண்ட்ரி ரூப்லெவ் உடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)