Ad Banner
Ad Banner
 பொது

இந்தியாவின் முதல் தரவு மைய உருவாக்கம் - டாடா குழுமம்

19/02/2026 07:40 PM

புதுடெல்லி, பிப்ரவரி 19 (பெர்னாமா) -- இந்தியாவின் ஏ.ஐ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க அடைவு நிலையாக, அத்தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பெரிய அளவிலான இந்தியாவின் முதல் தரவு மையத்தை உருவாக்க, Open-AI உடனான பங்காளித்துவத்தை டாடா குழுமம் இன்று அறிவித்தது.

இந்த மையம் 100 megawatts ஆற்றலுடன் தொடங்கவிருப்பதோடு, இது ஒரு
gigawatt-ட்டாக விரிவுபடுத்தப்படலாம் என்று டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

''நேற்று ஏ.எம்.டி உடன் ஓர் அறிவிப்பைச் செய்தோம். அங்கு உலகத்தரம் வாய்ந்த ஏ.ஐ ரேக் கட்டமைப்பை டாடாவின் உள்கட்டமைப்பு, பொறியியல், மின்சாரம் மற்றும் தீர்வுத் திறன்கள் பலத்துடன் இணைத்து, உலக தரத்திற்கு ஏற்ப இந்தியாவில் நிலையான, அதிக ஆற்றல் கொண்ட ஏ.ஐ-யை உருவாக்குவோம்,'' என்றார் அவர்.

வியாழக்கிழமை நடைபெற்ற AI தாக்க உச்சநிலை மாநாட்டில் பேசிய நடராஜன், இந்த ஒப்பந்தம் டாடா குழுமத்தின் டாடா ஆலோசனை சேவை, TCS நிறுவனத்திற்கு ஒரு பெரிய ஊக்கவிப்பாக அமையும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் 1 gigawatt தரவு மையப் பிரிவில் 700 கோடி டாலர் வரை முதலீடு செய்யும் திட்டத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)