கராச்சி, 20 பிப்ரவரி (பெர்னாமா) -- பாகிஸ்தான், கராச்சியில் நேற்று, வியாழக்கிழமை ஏற்பட்ட எரிவாயு கலன் வெடிப்பு சம்பவத்தில் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 13 பேர் காயமடைந்ததாக சம்பவ இடத்தில் இருந்த மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட அந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியான சோல்ஜர் பசார் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் முதல் மாடியில் எரிவாயு கலன் வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு வயது குழந்தை உட்பட ஏழு குழந்தைகளும் அடங்குவர் என்று போலீஸ் அதிகாரி சம்மையா சைட் தெரிவித்தார்.
வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டிடத்தினுல் காயமடைந்த குடியிருப்பாளர்களை காப்பாற்றிய அவசரகால பணியாளர்கள், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் புதைந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]