Ad Banner
Ad Banner
 பொது

சட்டத்தை பின்பற்றாத மாநிலங்களில் குப்பை வீசும் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

22/02/2026 06:40 PM

ஈப்போ, 22 பிப்ரவரி (பெர்னாமா) --  2007ஆம் ஆண்டின் திடக்கழிவு நிர்வாகம் மற்றும் பொது சுகாதார சட்டம், பிரிவு 672-ஐ பின்பற்றாத மாநிலங்களில் சிறிய அளவிலான குப்பை வீசும் பிரச்சனைகள் எழுந்தாலும், அமலாக்க அதிகாரிகள் மூலமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பினாங்கு, கிளந்தான், திரெங்கானு மற்றும் சிலாங்கூர் ஆகியவற்றுடன் சேர்த்து இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத ஐந்து மாநிலங்களில் பேராக் மாநிலமும் அடங்குவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

சட்டம் 672-ஐ ஏற்றுக்கொண்ட மாநிலங்களுக்கு திடக்கழிவு நிர்வாகம் மற்றும் பொது சுகாதார கழகம் SWCorp அமலாக்கத்தை மேற்கொள்கிறது என்றும் பேராக்கில், ஈப்போ நகர சபை எம்.பி.ஐ போன்ற உள்ளூர் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ஙா கோர் மிங் கூறினார்.

இன்று, ஈப்போவில் உள்ள பேராக் சீன சட்டமன்ற மண்டபத்தில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் ஙா அவ்வாறு கூறினார்.

சட்டம் 672, தற்போது ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா, பெர்லிஸ் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் அமலில் உள்ளது.

ஜனவரி 1 முதல் மலேசியாவில் பொது இடங்களில் குப்பைகள் வீசுவோருக்கு 12 மணிநேரம் வரை சமூக சேவை உத்தரவு விதிக்கப்படுவதோடு, கூடுதலாக 2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)