Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கட்டார் பொது டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றினார் அல்கராஸ்

22/02/2026 06:50 PM

கட்டார், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- கட்டார் பொது டென்னிஸ் போட்டியின் பட்டத்தை உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான கார்லோஸ் அல்கராஸ் கைப்பற்றினார்.

நடப்பு வெற்றியாளரான என்ரூ ரூபலேவை தோற்கடித்த அவர், இறுதி சுற்றில் பிரான்சின் ஆர்துர் ஃபில்ஸ்சை 50 நிமிடங்களில் அதிரடியாக வீழ்த்தி டென்னிஸ் உலகின் கவனம் ஈர்த்தார்

6-2, 6-1 என்ற புள்ளிகளில் எளிதில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் இதன் வழி 2026-ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்படாத ஆட்டக்காரர் என்ற தமது பதிவைத் தொடர்ந்துள்ளார்.

மேலும், ஏழு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் அவர் இதன் மூலம் தனது வாழ்வின் 26-வது பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலிய பட்டத்தை வென்று தனது கிராண்ட்ஸ்லாம் சாதனையை நிறைவு செய்த அல்கராஸ், மெல்போர்ன் போட்டிக்குப் பிறகு தனது முதல் டோஹா போட்டியில் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையையும் நீட்டித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)