டென்மார்க், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- டென்மார்க் Orsens 2026 உபர் கிண்ண பூப்பந்து போட்டியில் ஜப்பான் காலிறுதிக்கு முன்னேறிய வேளையில் மலேசியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
B பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசியா, முன்னாள் வெற்றியாளரான ஜப்பானிடம்
1-4 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டு இரண்டாவது இடத்தில் போட்டியை முடித்தது.
போட்டிக்கு முன்பே இரு அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.
ஆனால், அடுத்த ஆட்டத்திற்கு முன்னேற தவறிய மலேசியா, போட்டியில் இருந்து விடைபெற்றது.
முதல் ஆட்டத்தில், நாட்டின் முன்னணி ஒற்றையர் வீராங்கனையான
கே. லெட்ஷானா, மும்முறை உலக வெற்றியாளரான Akane Yamaguchi-யிடம்19-21, 17-21 என்ற நிலையில் தோல்வி கண்டார்.
அதேபோல, நாட்டின் இரட்டையர் வீராங்கனைகளான M. Thinaah–Ong Xin Yee ஜோடி
21-9, 21-9 எனும் நேரடி செட்களில் Yuki Fukushima–Mayu Matsumoto இடம் வீழ்ந்தனர்.
மூன்றாம் ஆட்டத்தில் களமிறங்கிய நாட்டின் Wong Ling Ching-கும் 16-21, 13-21 எனும் நிலையில் Tomoka Miyazaki தோல்வி அடைந்தார்.
இறுதியில், Low Zi Yu–Noraqilah Maisarah Ramdan ஜோடி மட்டுமே 21-17, 12-21, 21-19 எனும் நிலையில் ஒரே வெற்றியைப் பதிவு செய்தது.
வரும் வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதிப் போட்டியில், நான்கு குழுக்களின் சாம்பியன்களான சீனா, இந்தோனேசியா, தென் கொரியா அல்லது ஜப்பான் ஆகிய அணிகளில் ஒன்றை மலேசியா எதிர்கொள்ளும்போது, அது ஒரு கடுமையான சவாலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)