நியூ யார்க், 29 மார்ச் (பெர்னாமா) -- ஈரானில் தரைவழி தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க தற்காப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகன் தயாராகி வருகிறது.
தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அது பல வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் முடிவுக்காக பென்டகன் காத்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அது ஈரான் மீதான போரின் ஒரு புதிய கட்டத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கக் கூடும் என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவிலும், கப்பல் போக்குவரத்திற்கான அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பென்டகன் தெரிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)