Ad Banner
Ad Banner
 

புதுச்சேரியில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள்

04/04/2026 06:54 PM

புதுச்​சேரி​, ஏப்ரல் 04 (பெர்னாமா) -- ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதன் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடித்த வேட்பாளர்கள்,  அனல் பறக்கும் தங்கள் பிரச்சாரங்களை  பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். 

புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி பாஜக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​து சேர்ந்தார். 

தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் இந்திய மோடி சென்னையில் ஆலோசனை மேற்கொள்கொண்டுள்ளார். 

வேட்பாளர்கள் பட்டியல்  அறிவித்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து 
கிண்டியில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. 

இதனிடையே,  தமிழக அரசியலில் அதிக கவனம் ஈர்த்திருக்கும்  தமிழக வெற்றிக் கழகம், தவெக  புதுச்​சேரி​யில், முதன் முறையாக தனித்து களமிறங்குகிறது. 

தமது வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 

புதுச்சேரி மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் நின்று அவரை வரவேற்றனர். 

களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களை தாம் வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாகவும், அவர்களை வெற்றி பெற செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார். 

மற்றுமொரு நிலவரத்தில், திமுக,  திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மதவெறியோடு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் சட்டங்களைக் கொண்டு வரும் பா.ஜ.க.வையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வையும் மீண்டு மொருமுறை நிராகரிக்கத் தமிழ்நாடு காத்திருப்பதாக அவர் தமது கன்னியாகுமாரி பிரச்சாரத்திலும் அவர் பேசியுள்ளார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)