Ad Banner
Ad Banner
 பொது

ஜி.பி.கே: கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த அடைவுநிலை பதிவு

31/03/2026 03:34 PM

புத்ராஜெயா, 31 மார்ச் (பெர்னாமா) --  அதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டத்தோ டாக்டர் முஹமட் அசாம் அஹ்மட், 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான தேசிய சராசரி மதிப்பெண், ஜி.பி.கே கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

எஸ்.பி.எம் முடிவுகள், 2024-ஆம் ஆண்டில் பதிவான 4.49 மதிப்பெண்ணைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் 4.42-ஆக பதிவாகியுள்ளது.

''2024 எஸ்.பி.எம்-இல் 4.49 புள்ளிகளாக இருந்த தேசிய சராசரி மதிப்பெண், 2025 எஸ்.பி.எம்-இல் முன்னேற்றம் கண்டுள்ளதை இந்த அடைவுநிலை காட்டுகிறது. மதிப்பெண் 0.07 புள்ளிக்கு குறைந்திருப்பது, 2025 எஸ்.பி.எம் தேர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. எனவே, இந்த அடைவுநிலையை அடைய கடினமாக உழைத்து தங்கள் அர்ப்பணிப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்'', என்றார் அவர்

இதனிடையே, எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் குறிப்பாக கல்வி அமைச்சின் உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பின் கீழ் மாணவர்களை உட்படுத்திய தேர்வு முடிவுகள் ஒரு நல்ல முன்னேற்றத்தை காட்டுவதாக டத்தோ டாக்டர் முஹமட் அசாம் கூறினார்.

''2025ஆம் ஆண்டு, எஸ்.பி.ஜே.கே பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சியுடன் சான்றிதழைப் பெறத் தகுதிப்பெற்றனர். 2024ஆம் ஆண்டில் இரண்டு பேர் மட்டுமே தகுதிப் பெற்றிருந்தனர். இந்த அடைவுநிலை எட்டு பேர் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது'' என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)