கோலாலம்பூர், ஏப்ரல் 12 (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறையில் இருந்து தப்பிச் சென்ற, தடுப்புக் காவல் கைதியான பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் இன்னும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
24 வயதுடைய முஹ்மட் ஹசான் எனும் அச்சந்தேக நபரைக் கண்டுப்பிடிப்பதற்கான முயற்சிகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முஹ்மட் ஹக்பிஸ் முஹ்மட் நோர் தெரிவித்தார்.
சந்தேக நபர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அரச மலேசியப் போலீஸ் படை சனிக்கிழமை தெரிவித்திருந்தது.
ஷா ஆலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குப் பின்னர், மாலை மணி ஆறு அளவில் சுங்கை பூலோ சிறையில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த முஹ்மட் ஹசான் தப்பிச் சென்றுள்ளார்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் குடிநுழைவு தொடர்பான வழக்குகளை முஹ்மட் ஹசான் எதிர்கொள்ளும் நிலையில், கடைசியாக ஆரஞ்சு நிற சட்டையும் கருப்பு நிறக் காற்சட்டையும் அணிந்திருந்தார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொது மக்கள் திரையில் காணும் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)