புத்ராஜெயா, ஏப்ரல் 01 (பெர்னாமா) -- கடந்த 2023-ஆம் ஆண்டுTFST எனப்படும் நிதி பற்றாக்குறை மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீடமைப்புத் திட்டத்தின் பணிக்குழு அமைக்கப்பட்டதில் இருந்து, தாமதமான கட்டுமானம் மற்றும் கைவிடப்பட்ட திட்டங்கள் போன்ற காரணங்களினால் தடைப்பட்டிருந்த 1,501 வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அதன் மொத்த வளர்ச்சி மதிப்பு, GDV, 14,087 கோடி ரிங்கிட் என்றும் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 687 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு தெரிவித்தார்.
அந்த மொத்த எண்ணிக்கையில், 121 கைவிடப்பட்ட திட்டங்கள், வெற்றிகரமாக மீட்கப்பட்டு கட்டுமானப் பணிகள் சீராக தொடரப்படும் வேளையில், 1,345 வீடமைப்புத் திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு, நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ், CCC பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில், மொத்தம் 145 தனியார் வீடமைப்புத் திட்டங்கள் தாமதமானவையாகவும், 309 திட்டங்கள் கைவிடப்பட்டவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அது, முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க குறைவைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கைவிடப்பட்ட நிலையிலிருந்து சீரான நிலைக்கு திரும்பும் கட்டுமானத் திட்டங்கள், குறிப்பிடத்தக்க சரிவை நாம் கண்ள்ளோம். இருப்பினும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கைவிடப்பட்ட திட்டங்கள் இன்னும் 99 விகிதத்திள் உள்ளது. இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து வருகிறோம். சிறந்த தீர்வு எது, சிறந்த வழி எது என்பதையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருகிறோம்," என்றார் அவர்.
மலாக்கா, பெர்லிஸ் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் ஆகியவை கைவிடப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் இல்லாத மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டது, அந்த பணிக்குழுவின் தலையீட்டு அணுகுமுறையின் செயல்திறனை நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)