கோலாலம்பூர் , ஏப்ரல் 08 (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறுவதற்கு ஈரான் அனுமதித்த பின்னர், நம் நாட்டு கப்பல்களுக்கு T-L-D-M பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை இல்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் விளைவாக, மலேசியா ஈரானிடமிருந்து முழு ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக தற்காப்பு துணை அமைச்சர், அட்லி சஹாரி தெரிவித்தார்.
''தற்போதைக்கு, ஈரானிய அரசாங்கத்திடமிருந்து நல்ல ஒத்துழைப்பைப் பெற்றிருப்பதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். மேலும், அது நமது எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தேவைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும், குறிப்பாக மலேசியாவிற்கும் உதவும் என்று நம்புகிறோம்,'' என்றார் அவர்.
இன்று மலாக்கா, சுங்கை ஊடாங்கில் உள்ள தெரெமுகாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அட்லி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)