Ad Banner
Ad Banner
 பொது

ஏப்ரல் முதல் தங்குவிடுதி பள்ளிகளில் 300 உதவிக் மேலாளர்கள் நியமனம்

08/04/2026 05:53 PM

புத்ராஜெயா, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் உள்ள தங்குவிடுதி பள்ளிகளில் MyPWA எனப்படும் தங்குவிடுதி உதவிக் மேலாளர்கள் மொத்தம் 300 பேர் நியமிக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தங்குவிடுதி மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வைத் தொடர்ந்து வலுப்படுத்துவதை உறுதி செய்ய, மேலாளர்களுக்கு, குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்பிற்கு உதவுவதே MyPWA-இன் நோக்கம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு சீர்திருத்த செயல்திட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒன்றாக, MyPWA-இன் நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுப்படுத்தப்படும் என்று ஃபட்லினா சீடேக் கூறினார்.

2026-2035 தவணைக்கான மலேசிய கல்வி திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

இதில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் PdP தொடர்பான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)