சிரம்பான், ஏப்ரல் 10 (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை, உரிமம் இல்லாமல் 4,000 கிலோகிராமுக்கும் அதிகமான சமையல் எண்ணெயை வைத்திருந்ததாக, உள்நாட்டு ஆடவர் ஒருவர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று மியன்மார் பிரஜைகள் மீது, இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
உள்நாட்டு ஆடவர் சோங் ஸ்ஸே தோங் மற்றும் மியன்மார் பிரஜைகளான துங் காவ், மோ மைன்ட் வெ யான் மற்றும் நான் தெட் கின் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சோங் அக்குற்றத்தை மறுத்துள்ள வேளையில், இதர மூவரிடமும் எந்தவோர் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
ஏப்ரல் 7-ஆம் தேதி, கம்போங் பாரு மந்தினில், அந்த நால்வரும் ஒன்றாக இருந்தபோது, அட்டவணையிடப்பட்ட பொருளான, சுமார் 4,700 கிலோகிராம் எடையுள்ள சமையல் எண்ணெயை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு விநியோகிப்பு கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள், விதிமுறை 3(1)-ரின் கீழ், உரிமம் இன்றி, மொத்த விற்பனை சமையல் எண்ணெய் வியாபாரம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1961-ஆம் ஆண்டு விநியோகிப்பு கட்டுப்பாட்டுச் சட்டம், செக்ஷன் 21 மற்றும் செக்ஷன் 22(1), குற்றவியல் சட்டம் செக்ஷன் 34-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
5,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் Chong-கை விடுவித்த நீதிமன்றம், வழக்கின் மறுசெவிமடுப்பை ஏப்ரல் 27-ஆம் தேதி நிர்ணயித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)