புத்ராஜெயா, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- அனைத்து மந்திரி புசார் மற்றும் முதலமைச்சர்களை உட்படுத்தி, நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு மன்றத்தை அமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், (நட்மா), இதற்கு செயலகமாக செயல்படவிருக்கும் நிலையில், இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''இந்த மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்களாக அனைத்து மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள். மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக நடத்தப்படும். நேரப்படி நடத்தப்படும். தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா இதற்கு செயலகமாக செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்தைய கூட்டத்தில் Fahmi Fadzil இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)