தெஹ்ரான், ஏப்ரல் 09 (பெர்னாமா) -- ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை IRGC-இல் உளவுத்துறை தலைவரான மாஜிட் காடெமியின் இறுதிச்சடங்கில் அந்நாட்டு மக்கள் பெருமளவில் கூடினர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்கா–இஸ்ரேல் எதிரிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உயர்மட்ட தலைவர்கள் பலியான நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என
அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் போரைத் தொடரவும் சூளுரைத்தனர்.
மற்றுமொரு நிலவரத்தில், லெபனான் முழுவதிலும் நேற்று, இஸ்ரேல் போர் விமானங்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வேளையில்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால், போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)