Ad Banner
Ad Banner
 பொது

புந்தோங்கில் ஆடவர் கொலை; மேலும் மூவர் கைது

09/04/2026 05:32 PM

புந்தோங், ஏப்ரல் 09 (பெர்னாமா) -- பேராக், புந்தோங்கில் திங்கட்கிழமை ஏற்பட்ட கைக்கலப்பில் 25 வயது இளைஞர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ மேலும் மூவரை போலீஸ் கைது செய்துள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்காக, இதுவரை மொத்தம் 7 பேர் கைதாகியுள்ளனர்.

அம்மூவரும், இன்று காலை மகிழம்பு பகுதியில் கைது செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

முன்னதாக, ஈப்போ மற்றும் சுங்கை சிப்புட் பகுதிகளில் முக்கிய சந்தேக நபர் உட்பட 20 முதல் 30 வயதிற்குட்பட்ட  நால்வர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், எங்களில் உள்ள ஆரம்பத் தகவல்கள் உண்மையிலேயே தவறாக இருந்தால், நாங்கள் அதை இன்னும் கண்டறியவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். தகவல் பெற இன்னும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம்," என்றார் அவர்.

இன்று ஈப்போ போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை இரவு மணி 11.10 அளவில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் உயிரிழந்தது, தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் நஜிப் ஹம்சா கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)