Ad Banner
Ad Banner
 பொது

28 வெளிநாட்டினரின் நுழைவு அனுமதியை ஏ.கே.பி.எஸ் மறுத்துள்ளது

12/04/2026 04:56 PM

அலோர் ஸ்டார், 12 ஏப்ரல் (பெர்னாமா) --  ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை கெடா, புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் 28 வெளிநாட்டினரின் நுழைவு அனுமதியை எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஏ.கே.பி.எஸ் மறுத்துள்ளது.

அவர்களில் ஒரு பெண் உட்பட 14 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று புக்கிட் காயு ஹித்தாம், ஏ.கே.பி.எஸ்-சின் கொமாண்டர் எஸ்.ஏ.சி ஃபௌசி முஹமட் யூசோப் தெரிவித்தார்.

நாட்டிற்குத் திரும்பும் பயண டிக்கெட்டுகள் இல்லாதது மற்றும் குடிநுழைவு அதிகாரிகளிடம் பயணத்திற்கான நோக்கத்தைத் தெரிவிக்க இயலாதது உட்பட சுற்றுலாப் பயணிகளுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவருக்கும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அவர்களில் சிலருக்குச் சந்தேகத்தின் பேரில் பட்டியலிடப்பட்டு மலேசியாவிற்கு நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

அதே வேளையில், சேதமடைந்த கடப்பிதழ்களைப் பயன்படுத்தியதும் நாட்டிற்கு நுழைவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யாததும் கண்டறியப்பட்டதால், தாய்லாந்தை சேர்ந்த ஐவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

வங்காளதேசத்தை சேர்ந்த இருவர் உட்பட மியன்மார், இலங்கை, தைவான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாட்டினருக்கும் பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)